தலைவர்
புதுக்கோட்டை பாவாணன்
பொதுச்செயலாளர்
தமிழ் முகிலன்

உலகில் முதலில் தோன்றிய இனம் தமிழர் இனம். அடுத்தடுத்து ஏற்பட்ட கடற்கோள்களின் விளைவாக உலகம் முழுவதும் பரவிய இனமும் அதுதான். அமெரிக்கத் தொல் குடிகளான மாயன் மரபினரிலிருந்து ஆசுத்திரேலியப் பழங்குடியினர் வரை தமிழரினத்தின் கிளையினரே. அதனால்தான் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்கின்ற ஒப்பற்ற உயரிய கோட்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் சொந்தக்காரர்களாக தமிழர்களாகிய நாம் விளங்கி வருகிறோம்.

இப்படி உயரிய நாகரிக, பண்பாட்டு மரபினரான தமிழரின் தாயகங்களாக இன்றைக்கு விளங்கி வருபவை தமிழ்நாடும் தமிழீழமுமே.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக தமிழினத்தின் மீது பல்வேறு திரிபு இனத்தவரின் போர் மற்றும் பண்பாட்டு ஊடுருவல்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக நாம் அடிமையுற்று தன்னிலைக் கெட்டு வாழ்ந்து வருகின்ற அவலச் சூழலில் உள்ளோம். மாற்று இனத்தவரின் ஆளுமைக்குள் நம் தமிழும் தமிழரும் தமிழ்நாடும் மீள முடியா இன்னலுக்கு ஆட்பட்டுள்ளது. இவ்வடிமைத் தளையிலிருந்து மீள இதுவரை எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் அரைகுறை முயற்சியாகளாகவே இருந்து வருகின்றன.

இன்று வளர்ந்து வரும் பன்னாட்டு வல்லரசிய சூழலிலும் இந்தியச் சூழலிலும் தமிழினத்தின் மீதான தாக்குதல்கள் பன்னூறு மடங்கு அதிகமாகியுள்ளன. அழிந்து வரும் தொல்லினங்களின் பட்டியலில் நம் தமிழினம் சேர்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதன் மீட்சிக்காகப் போராட வேண்டியது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் உடனடிக் கடமை ஆகிறது. அதனால்தான் தமிழர் கழகம் தோற்றம் கண்டுள்ளது.



தமிழ் கூறுனல்லுலகிற்கு வணக்கங்கள்.

தமிழர் இன ஒற்றுமை, தமிழ் இன மீட்சி என்றெல்லாம் வாய் கிழிய இன்று பேசுகிறோமே யழிய உண்மையில் எங்குள்ள தமிழனுக்கு விடுதலை தேவை; யாருக்குத் தனிநாடு வேண்டும் என்பதனை யுணர்ந்தாரில்லை. இலங்கைத் தமிழர்கள் என்னவோ ஈழத்தில் வந்தேறிகள் போலவும் மூன்றாந்தரக் குடிகள் போன்றும் ஒரு மன உணர்வுடன்தான் பொதுவாகவே இதனை யாவரும் பார்க்கின்றனர். ஈழ மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் சிலரோ ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்துதான் இலங்கை சென்றது போலவும், அகதிகளாகத் தமிழக மண்ணிற்குத் திரும்பி திறந்தவெளிச் சிறையிருப்பதைத் தாயகம் திரும்பியுள்ளதாகவும் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஈழம் மட்டுமல்லாது மலேயா, சாவகம், சிங்கை, மணிபல்லவத்தைச் சார்ந்த தீவுப் பகுதிகள், சுமத்திரா நாட்டின் சூழ் பகுதிகள் யாவுமே 'குமரிக் கண்டத்தின்' தொன்மையான நாடுகள் என்பதனையும் அங்குள்ள தமிழர்களே முதன் முதல் தோன்றிய மாந்த இனத்தினர் என்பதனையும் நினைவில் கொண்டால் இந்த மாயை தோன்றாது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையிலும் தனிநாடும் அரசும் அமைத்து விட்டனர். அது உலக அரங்கில் இன்றோ நாளையோ என்றோ ஒருநாள் ஒப்பேற்பளிக்கப் பட்டு விடும். ஆனால் தாய் மண் என்று கூறிக் கொள்கிற இந்தியத் தமிழ் மண்ணிலோ தனித்தமிழில் பேசுபவன் வன்முறையாளன் எனக் குறிக்கப்படுகிறான். தமிழின மீட்சியைப் பற்றிப் பேசினால் தேசப் பாதுகாப்பிற்கு எதிரானவன் என்றெல்லாம் கைது செய்யப் படுகிறான். அதுவும் யாரால்? இந்த அசல் (?) தமிழனின் கட்சி ஆட்சியால். இதை விடவும் கொடுமை என்னவென்றால் புலிகளை எதிர்த்துப் போராடும் சிங்கள அரசு கூட விடுதலைப் புலிகளை ஆதரிப்போரைக் கைது செய்வதில்லை. மாறாகத் தூது பேச அனுப்புகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு என்று பெயர் கொண்ட இந்த மண்ணில் மட்டும்தான் தமிழ் இனம் ஒரு தடை செய்யப் பட்ட இனம் போல் நடத்தப்படுகிறது. புலிகள் தனியாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்துகின்றனர். ஆனால் அந்த உரிமை இங்கு யாருக்காவது உண்டா? (தணிக்கைக்குட்படுத்தப் பட்ட அலைவரிசைகள் மட்டுமே உண்டு.)



1. தமிழகத்தின் எல்லைகளைப் பாதுகாக்க நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு துன்பங்களைத் தாங்கி வீரச்சாவெய்திய அனைத்து மாவீரர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

2. ஆந்திரப் பிரிவினையின் போது ஆந்திர எல்லைக்குள் அடக்கப்பட்டு பல்வேறு தொடர் போராட்டங்கள் மூலம் 1960 ஆண்டு ஏப்பிரல் முதல் நாளில் தாய்த்தமிழகத்தோடு சேர்ந்த திருத்தணிகை வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்பிரல் முதல் நாளை தணிகை மீட்சி நாள் என்ற பெயரில் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்றும், எதிர்வரும் 2009 ஏப்பிரல் முதல் 2010 ஏப்பிரல் வரை தணிகைப் பொன்விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் தமிழர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3. தமிழகத்தில் இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் மொழிப்போர் மற்றும் எல்லைப் போராட்ட வரலாறுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து தமிழக மாணவர்களுக்கு தாய்மொழி மற்றும் நாட்டுப் பற்றை ஊட்ட வேண்டும் என தாய்த்தமிழ்ப்பள்ளிகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாக்கும் பாடத் திட்டத்தை அப்படியே தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அரசு பள்ளிகளிலும் மொழிப்போர் மற்றும் எல்லைப் போர் வரலாற்றைப் பாடமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.



ஒரு ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை "நாடு" என்று சொல்லலாம். சமற்கிருத சொல்லாக மாறிய "தேசம்" என்ற சொல்லும் நாடு என்ற பொருளையே குறிக்கிறது. ஆகவே இந்தியாவை நாடு என்று சொன்னாலும் தேசம் என்று சொன்னாலும் பொருள் ஒன்றே. அதனால்தான் இந்திய தேசம் என்றும் இந்திய தேசியம் என்றும் ஆளும் வகுப்புகள் கூறி வருகின்றன.

ஆனால், இசுடாலின் வரையறையான ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளியல் வாழ்க்கை மற்றும் மனவியல்பு (பண்பாடு) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலாளிய குடியரசுப் புரட்சியின் வெற்றியால் உருவான நாடுகள் புது வகைப்பட்டன. பொதுவாக ஒரு மொழி பேசும் மக்களைக் கொண்டு நாடுகள் உருவாக்கப்பட்டன. மொழியின் பெயராலேயே அந்நாடுகள் அழைக்கப்பட்டன.

பிரெஞ்சு, இங்கிலாந்து, இத்தாலி, செர்மன் போன்ற நாடுகள் மொழியின் பெயரிலேயே உருவாயின. ஆகையால் இந்நாடுகளை "மொழி நாடுகள்" என்று அழைப்பதே சரியானதாக இருக்கும்.

தேசிய இனச் சிக்கல் என்பதை “மொழி நாட்டினச் சிக்கல்’’ என்றும் அவற்றுக்கான இயக்கங்களை “மொழி நாட்டியக்கங்கள்’’ என்றே இந்நூலுள் குறிப்பிடப் படுகின்றது. ஆகையால் இந்த புதிய சொற்களைப் புரிந்து கொண்டு இந்நூலைப் படிக்கவும்.

கடந்த காலங்களில் நடந்த மொழி நாட்டினங்களின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். அதைத் தெரிந்து கொண்டால்தான் இன்றைய காலக் கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் மொழி நாட்டினச் சிக்கலை எவ்வாறு அணுகலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மொழி நாட்டினச் சிக்கல் வரலாற்றின் எந்த காலகட்டத்தில் தோன்றுகிறது?

உலகில் உள்ள அனைத்துக் குமுகங்களிலும் வரலாறு ஒரு சுழற்சிப் பாதையில்தான் மாற்றம் காண்கிறது. அதாவது தொல் பொதுவுடைமைக் குமுகாயம், ஆண்டான் அடிமை குமுகாயம், நிலக்கிழமை குமுகாயம், முதலாளியக் குமுகாயம், ஒப்புரவுக் குமுகாயம், பொதுமை குமுகாயம் என்ற வட்டச் சுழற்சிப் பாதையில்தான் இயங்கி வருகின்றது. இந்த சுழற்சி வட்டப் பாதையில் எந்த காலக் கட்டத்தில் மொழி நாட்டுச் சிக்கல் தோன்றுகிறது.

"உலகம் முழுவதும், நிலக்கிழமையை எதிர்த்து முதலாளியத்தின் இறுதி வெற்றியின் காலப் பகுதி மொழி நாட்டின இயக்கங்களுடன் இணைந்துள்ளது." (இலெனின். மொழி நாட்டினச் சிக்கல்களும், தொழிலாளி வகுப்பின் ஓருலகியமும் [சர்வ தேசிய வாதமும்] பக்கம் 76)

"மொழி நாடு என்பது வெறும் வரலாற்று வகையினம் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைச் சேர்ந்த வரலாற்று முறையிலான வகையினம் ஆகும். நிலக்கிழமையை ஒழித்து முதலாளியம் வளர்ந்து வரும் நேரத்தில்தான் மொழியின நாடுகள் உருவாயின. எடுத்துக் காட்டாக இதற்கு ஐரோப்பாவைச் சொல்லலாம். நிலக்கிழமையில் ஏற்பட்ட பிளவை வெற்றிக் கொண்டு முதலாளியம் முன்னேறிய போதுதான் பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இத்தாலி போன்றவை மொழி நாடுகளாக உருவாயின." (இசுடாலின். மார்க்சியமும், மொழி நாட்டினச் சிக்கலும் - பக்கம் 22)

மேற்கண்ட இலெனின், இசுடாலின் இருவரின் மேற்கோள்களும் நிலக்கிழமையை எதிர்த்து முதலாளியக் குடியரசுப் புரட்சியின் தோற்றுவாயில்தான் மொழி நாடு உருவாக்கம் பெற்றது. முதலாளியப் புரட்சியின் வெற்றியால்தான் பிரான்சு, பிரிட்டன், செருமனி, இத்தாலி போன்ற நாடுகள் தோன்றியன. முதலாளிய மக்களாட்சி தோற்றத்தோடு மொழி நாடுகள் உருவாயின.